Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 65 படத்தின் இசை குறித்து வந்த தகவல்- விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

இளைய தளபதி விஜய் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக இருந்து வந்தார். இடையில் கொரோனா வந்து அனைவருக்கும் ரெஸ்ட் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

விஜய் நடிப்பில் மாஸ்டர் என்ற படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும் என செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இடையில் மாஸ்டர் OTTயில் வெளியாகிறது என செய்தி வர ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.

ஆனால் படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகிறதாம். தற்போது விஜய்யின் அடுத்த படம் பற்றி தகவல் வந்துள்ளது. அதாவது தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க படத்திற்கு தமன் இசை என நமக்கு ஏற்கெனவே தெரியும்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் தளபதி 65 படத்திற்காக ஒரு பாடலை தமன் இசையைமத்து முடித்துவிட்டதாகவும், அதை கேட்ட விஜய்க்கும் மிகவும் பிடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.