Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரத், பிரியா பவானி ஷங்கர், மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் டைம் என்ன பாஸ் வெப் சீரிஸ் ட்ரைலர்..

தற்போது தமிழ் திரையுலகில் வெப் சீரிஸ் பல வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆம் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின், ஆட்டோ ஷங்கர், பிங்கர் டிப், மற்றும் நிலா நிலா ஓடி வா உள்ளிட்ட பல வெப் சீரிஸ் இதுவரை தமிழில் வெளிவந்துள்ளது.

அதே போல் தற்போது வெப் தொடர்களில், முன்னணி நடிகர் நடிகைகளே பலரும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது நடிகர் பரத், ப்ரியா பவானி ஷங்கர், கருணாகரன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'டைம் என்ன பாஸ்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.

இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது என்றும் இதன் First லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்திருந்த நிலையில் தற்போது இந்த வெப் சீரிஸின் மிகவும் கலாட்டாவான ட்ரைலர் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த வெப் சீரிஸில் கௌரவ வேடத்தில் பிரபல நடிகர் அசோக் செல்வன் ஒரு காட்சியில் நடித்துள்ளார் இதோ 'டைம் என்ன பாஸ்' வெப் சீரிஸின் ட்ரைலர்.