Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்சேஷன் ஹிட்டான ஓ மை கடவுளே திரைப்படம், ஒரு கொரியன் நாடகத்தின் காப்பியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே இளம் ரசிகர்கள் மத்தியில் பெரிது ரசிக்கப்பட்டு, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ஓ மை கடவுளே.

அறிமுக இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து, கடந்த காதலர் தினத்தன்று இப்படம் வெளிவந்தது.

மேலும் இப்படத்தின் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ.17 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவயான படங்களில் இதுதான் அதிகமான வசூல் செய்த படம் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் கொரியன் திரையுலகில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஆப்ரேஷன் ப்ரபோசல் தொடரின் அப்பட்டமான காப்பி எனவும், இந்த இரு படத்தின் கதைக்களமும் ஒன்றாக தான் இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.