Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Breaking : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்

மாநகரம், கைதி போன்ற படங்களின் வெற்றிகளுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் மாஸ்டர். தளபதி விஜய்யை இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு மிகவும் ஸ்டைலிஷாக மாற்றியுள்ளார் லோகேஷ்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளிவருவிருந்த இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரிலீஸ், வரும் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தின் தலைப்பு " எவனென்று நினைத்தாய் " என தற்போது பிரேக்கிங் தகவலாக கிடைத்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்று மாலை வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு..