Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் 2 படங்கள் - முன்னணி தொலைக்காட்சியின் TRP பிளான்

கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இதுவரை திறக்காமல் இருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்குக்கு தமிழ்நாட்டில் திறக்கப்படுத்து என்று கூறுகின்றனர்.

விஜய்யின் மாஸ்டர் போன்ற அதிக பொருட் செலவில், ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய பல படங்கள் வெளிவராமல் இருக்கிறது. இதனால் பொன்மகள் வந்தால், பென்குயின் உள்ளிட்ட படங்கள் ஏற்கனவே OTTயில் வெளிவந்தது. இதனை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும் திரையரங்கில் வெளிவராமல், அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் OTTயில் வெளிவரும் என சூர்யா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திரையரங்குக்கு இல்லாமல், OTTயும் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் 2 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்றால், சுந்தர்.சி தயாரிப்பில் பிரசன்னா நடிப்பில் உருவாகி வரும் மலையாள படத்தின் ரீமேக்கான மாயாபஜார் படமும், கொம்பன் மருது போன்ற படங்களை இயக்க முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த இரு படங்களும் பிரபல முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் வெளியாகவுள்ளது என தெரிவிக்கின்றனர். இதனால் சன் டிவியின் TRP இன்னும் அசுர வளர்ச்சியை எட்டும் என்று கூறப்படுகிறது.