Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று படத்திற்கு 2022-ம் ஆண்டு வரை தடையா? - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அக்டோம்பர் 30ஆம் தேதி அமோசான் பிரைமில் வெளியாகவிருக்கும் படம் சூரரை போற்று.இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து மண் உருண்ட, காட்டு பயலே, வெய்யோன் சில்லி மாறா தீம் என பல பாடல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் ஏகாதசி வரிகளில் செந்தில் கணேஷ் குரலில் வெளியான மண் உருண்ட பாடலில் “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிகாரனுக்கு இரண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” எனும் வரிகள் சாதி பிரச்சனையை தூண்டும் வகையில் இடம்பெற்று உள்ளதாக தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் இதனால் இப்படத்தை 2022ஆம் ஆண்டு வரை இப்படத்தை தடை செய்யவேண்டும் என இவ்வளவுக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சூரரை போற்று பாடலுக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம்,சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பாடல் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆகிய நிலையில், நீட் பற்றி நடிகர் சூர்யா பேசியவுடன் ஏன், இந்த சூரரை போற்று படத்தை தடை செய்யக்கோரி பிரச்னை எழுந்துள்ளது என பலரும் கேட்டு வருகின்றனர்.