Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தடை சர்ச்சைகளுக்கிடையில் சூரரை போற்று செய்த சூப்பரான சாதனை! டேக் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்

சூர்யா அண்மையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை அரசியல் விவாதமாகிப்போனது. நீதிமன்றத்தை அவர் அவமதித்தாக சிலர் குறிப்பிட நீதிபதிகள் சிலரே சூர்யா மீது நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என கூறியதும் வெளிவந்தது.

இந்நிலையில் சூரரை போற்று படத்தில் மண் உருண்ட பாடலில் சாதி பிரச்சனையை தூண்டுவிதமாக பாடல் வரிகளை அமைந்திருப்பதாகவும், இது தமிழக மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை பெரிதாக்கக் கூடும் எனவும் அதனால் 2022 வரை சூரரை போற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தருமபுரி அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணையில் காவல் துறை தன் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த நபர் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து புகாரை காவல்துறை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சர்ச்சைகளுக்கிடையில் சூரரை போற்று படம் சினிமா தகவல்கள் குறித்த ஆங்கில தளம் ஒன்றில் இந்த 2020 அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் டேக் போட்டு கொண்டாடுகிறார்கள்.