Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் முக்கிய பணிகள் இன்று தொடக்கம், வெளியான புதிய புகைப்படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக விளங்குபவர்.

இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதனை தொடர்ந்து இவர் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார்.

டாக்டர் திரைப்படத்தின் பாடல்களான செல்லமா மற்றும் நெஞ்சமே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது, கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் பணிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

இதில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் VJ அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.