Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோடிக்கணக்கில் OTTயில் விற்பனையான 'டாக்டர்' திரைப்படம்? ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

சமீப காலமாக OTTயில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் நேரடியாக OTT தளத்தில் வெளியாகின.

இதில் பொன்மகள் வந்தால் மற்றும் லாக்கப் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் அடுத்ததாக யாரும் எதிர்பாராத விதத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி OTT யில் நேரடியாக வெளியாகிறது.

அந்த வரிசையில் தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் OTT யில் வெளியிட படக்குழு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை அமோசான் OTT நிறுவனம் சுமார் ரூ. 30 கோடிக்கு விலை பேசி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.