Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை எப்படி?- பிரபலமே வெளியிட்ட தகவல்

விஜய்யின் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் மாஸ்டர். கல்லூரி மாணவன் போல் விஜய் இதில் மிகவும் கியூட்டாக நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் செம ஹிட்டானது, இப்போதும் அப்பாடலுக்காக பலர் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அடுத்து விஜய் தன்னுடைய 65வது படத்தை இயக்க ஏ.ஆர். முருகதாஸிற்கு ஓகே கூறியுள்ளார். அப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எந்த விவரமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் இடையில் வெற்றிமாறன்-விஜய் கூட்டணி பற்றி செய்திகள் வந்தன. அண்மையில் ஜி.வி. பிரகாஷிடம் இதுகுறித்து கேட்க அவர், கண்டிப்பாக இது மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு படம், இருவருமே ஒன்றாக பணியாற்ற விரும்புகிறார்கள்.

அதற்கான நேரம் இப்போது அமையவில்லை, அடுத்த வருடமோ இல்லை அதற்கு அடுத்த வருடமோ படம் கூடிவரும். ஆனால் கண்டிப்பாக ஒரு சூப்பர் படமாக அமையும் என கூறியுள்ளார்.