அட்லீ சிறு வயதிலேயே கடின உழைப்பின் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனவர். ராஜா-ராணி என்ற அழகிய படத்தை இயக்கி தளபதியை கவர்ந்துள்ளார்.
எனவே விஜய்யை வைத்து 3 படங்கள் எடுக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தெறி, மெர்சல், பிகில் என இந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான்.
அடுத்தபடியாக அட்லீ இயக்கப்போவது யாரை தெரியுமா, பாலிவுட்டின் முன்னணி நாயகன் ஷாருக்கானை தான். இவர்கள் புதிய படத்தில் இணைய இருக்கிறார்கள் என்று எப்போதோ தகவல் வந்தது, ஆனால் அடுத்த ஸ்டெப் எதுவும் நடக்கவில்லை.
இந்த நேரத்தில் தான் படம் குறித்து ஒரு தகவல். அதாவது படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடம் என்றும் ஹீரோ-வில்லன் என நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.