சுதா கொங்கரா இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்து வெளியாகவுள்ள படம் சூரரை போற்று. திரையரங்கில் வெளியாகவிருந்த படம் கொரோனா தாக்கம் காரணமாக ஓடிடியில் வெளியாகிறது.
ஆம் வரும் அக்டோம்பர் 30ஆம் தேதி சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துவிட்டனர். சூரரை போற்று திரைப்படம் சுமார் 45+ கோடிக்கும் மேல் தான் அமேசானில் வியாபாரம் ஆகியுள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சூரரை போற்று திரைப்படத்தின் முழு உரிமம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது :
1. அமேசான் பிரைம் ரைட்ஸ் = 45+ கோடி
2. சாட்டிலைட் ரைட்ஸ் [ தமிழ், தெலுங்கு ] = 20 கோடி
3. ஹிந்தி டப் மற்றும் ரீமேக் ரைட்ஸ் = 20+ கோடி
4. ஓவர்சீஸ் = 10+ கோடி
மொத்தம் 100+ கோடிக்கும் மேல் வியாபாரத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.