பிரபு தேவா இயக்கத்தில் இதுவரை இரண்டு முறை சல்மான் கான் நடித்துள்ளார். ஆம் 2009ஆம் ஆண்டில் வெளியான Wanted மற்றும் 2019ஆம் ஆண்டு வெளியான தபாங் 3.
இந்த இரு படங்களை தொடர்ந்து மீண்டும் மூன்றாம் முறையாக இந்த கூட்டணி 'ராதே - மோஸ்ட் wanted பாய்' எனும் படத்தில் இணையவுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக இளம் தமிழ் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளாராம். மேலும் முக்கிய கதாபாத்திரத்தின் நடிகர் பரத் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேகா ஆகாஷ் தமிழில் எனை நோக்கி பாயும் தோட்ட, வந்த ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.