Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஷாலின் சக்ரா படத்தின் மேல் விழுந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் விடுத்த அதிரடி உத்தரவு..

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் M.S. ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சக்ரா, இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் விரைவில் OTT யில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடைகோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனமான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவணம் தான் சக்ரா படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிறுவனத்திடம் கூறிய அதே கதையை தான் இயக்குனர் ஆனந்தன் சக்ரா என்ற படமாக எடுத்துள்ளதாகவும் இப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படத்தினால் தங்களுக்கு 8 கோடியே 29 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், அந்த பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் 24 ஆம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி சென்னை உயர்நிதிமன்றம் நடிகர் விஷால் மற்றும் M.S.ஆனந்தனுக்கு உத்தரவிட்டுள்ளது.