Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் திரைப்படம் மட்டுமல்ல 'கமல் 232' படம் குறித்தும் பேசிய லோகேஷ் கனகராஜ், என்ன கூறியுள்ளார் தெரியுமா..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர். மாநகரம் மற்றும் கைதி என இரண்டே திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

மேலும் இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவான கைதி திரைப்படம்.

மக்களின் பேராதரவை பெற்றதுமில்லாமல், சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாக்டவுன் முடிந்தவுடன் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் ரசிகர்கள் மன்ற நலத்திட்ட உதவியில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பேட்டியின் போது மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் அடுத்ததாக இவர் இயக்கவுள்ள கமல் 232 குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "இப்போது தான் ஆரம்பித்துள்ளோம், அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது, மாஸ்டர் படம் வெளியான பிறகு இது குறித்து சொல்கிறேன்" என கூறியுள்ளார்.