அஜித்தின் வலிமை படப்பிடிப்பில் இருந்து வெளியான ஒரு சூப்பரான புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்
இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை.
இப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிவிட்டது, ஆனால் இடையில் கொரோனா வந்து எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது.
அண்மையில் மத்திய அரசு படப்பிடிப்பு நடத்தலாம் ஆனால் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று சில கண்டுப்பாடுகள் விதித்தனர்.
அந்த விஷயங்களோடு எல்லா நடிகர்களின் படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டது. அஜித்தின் வலிமை படப்பிடிப்பும் அண்மையில் தொடங்கியது, இதில் தெலுங்கு சினிமா நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்பது ஏற்கெனவே வந்த தகவல்.
ஹைதராபாத்தில் இருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளார், அவருடன் ஒரு ரசிகர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.