லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படத்தில் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ள சந்தோஷ் சிவன்.. !
திரைப்படம் by Jeeva
தமிழ் சினிமாவில் தற்போது மிக முக்கிய இயக்குனராக விளங்குபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது இவர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார், அதன்பின் கமல்ஹாசன் உடன் பணிபுரிய உள்ளார்.
இந்நிலையில் இவர் இயக்கத்தில் முதலில் வெளியான மாநகரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.
இதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் விக்ராந்த் மாசே மற்றும் சஞ்சய் மிஸ்ரா என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவரின் கைதி திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது, இதில் நடிகர் அஜய் தேவகன் நடிக்கவுள்ளார்.