தியேட்டர் திறந்ததும் முதல் தமிழ் படம் இது தான் ரிலிஸாம்- மாஸ்டர் இல்லை, என்ன படம் தெரியுமா?
திரைப்படம் by Tony
தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் போதாத காலம் தான் போல. ஆம், பெரிய ஹிட் படங்கள் ஏதும் வராத நிலையில் இந்த கொரொனா வந்து மொத்தமும் முடிந்த கதையானது.
கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு திரையரங்கமும் திறக்கவில்லை, இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வந்தனர்.
அவர்களுக்கு நற்செய்தியாக நேற்று மத்திய அரசு அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
அதை தொடர்ந்து முதல் படமாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 வெளிவரும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் அனைவரும் விஜய்யின் மாஸ்டர் முதலில் வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது இப்படியொரு செய்தி வெளிவந்துள்ளது.