ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிசில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கை தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளதாகத் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும், தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று முன்னனி நடிகைகளிடம் பேசுவார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.