Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து மாஸ்டர் படத்திற்கு புதிய எதிர்ப்பு? யாரால் தெரியுமா - ரசிகர்களுக்கு அதிர்ச்சி

அரசியல் கட்சிகளை தாக்கி பேசும் வசனத்தினாலும், அரசியல் கட்சிகள் போடும் திட்டத்தை எதிர்த்து விஜய் தனது படங்களில் வசனங்கள் பேசுவதாலும், அவரின் படங்களுக்கு பல எதிர்ப்புகள் இதுவரை தலைதூக்கியுள்ளது.

ஆம் குறிப்பாக அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் உள்ளிட்ட படங்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் பல எதிர்ப்புகள் விஜய்க்கு வந்துள்ளன.

விஜய்யின் தீவீர ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி தற்போது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வராலாற்று படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையும், அதே சமயத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களின் படுகொலையையும் காட்சிகளாக எடுத்துக்காட்ட இருக்கிறார்கள்.

இதனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் #shameonvijaysethupathi என கூறி டிரண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் விஜய் சேதுபதி அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கும் எதிர்ப்புகள் வர வாய்ப்புகள் இருக்கும் என்றும் தெரிவிக்கிப்படுகிறது. இந்நிலையில் விஜய்யுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கும் எதிர்ப்புகள் வர வாய்ப்புகள் அதிகம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.