Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

க/பெ.ரணசிங்கம் திருட்டு கதையா.. இயக்குனர் மீது புகார் அளித்த எழுத்தளார்

விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து ஜீ ஃப்ளெக்ஸில் வெளியான திரைப்படம் கணவர் பெயர் ரணசிங்கம்.

இப்படத்தின் கதை துபாய் செல்லும் தனது கணவன், அங்கு நடக்கும் விபத்தில் இறந்துபோகிறார். அவரின் உடலை இந்தியாவிற்கு எப்படி ஒரு சாமானிய பெண் வரவைக்கிறார். அதில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் இதுதான் க/பெ. ரணசிங்கம்.

இப்படத்தின் கதையும் மிகவும் வலுவாகவும், உருக்கமானதாகவும் இருந்ததால், ஓ.டி.டியில் வெளியான படங்களில், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று கூறி, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள எழுத்தாளர் மிடறு முருகதாஸ் என்பவர், இயக்குனர் விருமாண்டி மீது புகார் கொடுத்துள்ளார்.

புகார் மனுவில் மிடறு முருகதாஸ் கூறியிருந்தது :

நான் எழுதி கடந்த 2017ஆம் ஆண்டு 'கதை சொல்லி மாத' இதழில் வெளியான ‘தவிப்பு' என்ற கதையை மையமாக வைத்து க/பெ.ரணசிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை 2018ஆம் ஆண்டு நான் வெளியிட்ட 'தூக்கு கூடை' என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

எனவே அனுமதி பெறாமலேயே எனது கதையை பயன்படுத்தி, க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் விருமாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

மிடறு முருகதாஸ் நிருபர்களிடம் கூறியது :

2017ஆம் ஆண்டு வெளியான எனது கதையை பயன்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது. என்னிடம் கேட்டிருந்தால் எந்த பலனையும் எதிர்பாராமல், நான் அந்த கதையை வழங்கி இருப்பேன்.

ஆனால் எந்த தகவலும் சொல்லாமல் படம் எடுத்திருப்பது வருத்தத்தை தருகிறது என்றும் நிருபர்களிடம் கூறியுள்ளார்.