Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரையரங்குகள் திறந்தவுடன் முதலில் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் திரைப்படம், போஸ்டருடன் இதோ..

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நாடு முழுவதிலும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனால் சினிமா துறையை சேர்ந்த அனைவருக்குமே நஷ்டம் தான், இதன் காரணமாக பல திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு திரைப்படத்தை திரையரங்குகள் திறந்தவுடன் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சரிலேறு நீகேவ்வறு என்ற திரைப்படத்தை இவனுக்கு சரியான ஆள் இல்லை என தமிழில் டப் செய்து வெளியிட உள்ளனர். மேலும் இப்படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.