Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் 232 இந்த ஹாலிவுட் திரைப்படம் போல தான் இருக்குமாம், வேற லெவல் சம்பவம் பண்ண காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி உள்ளிட்ட இரண்டு பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்தார். மேலும் இப்படமும் அடுத்த வருடம் வெளியாகும் என நம்பப் படுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலை வைத்து கமல் 232 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலின் வெறித்தனமான பேன் என்பதால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'John Wick' திரைப்படம் போல் உச்சகட்ட ஆக்ஷன் தில்லராக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் நடிகர் கமல் தாடியும் மீசையுமாக தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டுள்ளாராம்.