Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் பொருட்செல்வவில் எடுக்கப்பட்ட ' காடன் ' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்..

கும்கி, மைனா, தொடரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் தற்போது கும்கி திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் ' காடன் ' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.இப்படத்தில் கதாநாயகியாக ஜோயா நடித்துள்ளார்.

பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக, தள்ளிப்போனது. தற்போது 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘காடன்’ திரைக்கு வரும் என்று பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.