தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கிறது ரஜினியின் முத்து. 1995ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தயாரான இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமானின் இசை முக்கிய பங்கு வகித்தது.
படத்தில் இடம்பெறும் ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடலை தான் முதலில் எடுத்துள்ளார்கள், பின் மைசூரில் கிளைமேக்ஸ் எடுத்திருக்கிறார்கள்.
சென்னை வந்து படத்திற்கான மற்ற காட்சிகளை எடுத்திருக்கிறார். நாயகியாக மீனாவையே முதலில் படக்குழு தேர்வு செய்துள்ளார். ஆனால் சரத் பாபு நடித்த வேடத்தில் முதலில் இரண்டு பேரிடம் படக்குழு கேட்டிருக்கிறார்.
அரவிந்த் சாமி தான் முதல் தேர்வாக இருந்துள்ளார், பின் ஜெயராம். இருவருமே படத்தில் ரஜினியை அடிக்கும் காட்சி வருகிறது, ரசிகர்கள் கோபம் கொள்வார்கள், அந்த காட்சியை எடுத்தால் நடிக்க ஒப்புக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் படத்தின் முக்கிய காட்சியே அது என்பதால் படக்குழு அடுத்த தேர்வாக ரஜினி கூறியதால் சரத் பாபுவிடம் கேட்டுள்ளனர். கடைசியில் அவர் நடித்து முடித்துள்ளார்.