Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர்! குழப்பத்தில் ரசிகர்கள்,வெளியான உண்மை தகவல் இதோ..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2, இப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கொரோனா வந்ததால் இந்தியன் 2 படத்தின் பணிகள் அனைத்தும் முற்றிலும் நின்று போனது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு படப்பிடிப்பை துவங்குவதற்கான அனுமதி அழித்தும் இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்கவில்லை.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்காவிட்டால் தான் வேறு படத்தில் பணிபுரிய இருப்பதாக கோரி லைக்கா நிறுவனத்திற்கு ஷங்கர் கடிதம் எழுதியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

மேலும் இதனை முற்றிலும் மறுத்துள்ள லைக்கா நிறுவனத்தின் CEO, இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இந்தியன் 2 படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் 500 முதல் 600 பேர் வரை கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

கமல்ஹாசனிடம் நேற்று கூட இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆலோசனை செய்தோம், இப்படத்தின் படப்பிடிப்புக்கான திட்டமிடுதல் பணி தற்போது நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.