தளபதி விஜய் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய, எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைப்படம்..உற்சாகத்தில் ரசிகர்கள்
திரைப்படம் by Jeeva
எஸ்.எஸ்.ராஜமௌலி இந்திய திரையுலகே போற்றும் ஒரு மிக பெரிய இயக்குனராக கருதப்படுபவர், பாகுபலி திரைப்படங்களின் மூலம் இவர் உலகெங்கிலும் பிரபலமானார்.
இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் டீசரில் ராம் சரண் இடம் பெற்று இருந்தார்.
மேலும் நேற்று வெளியாகியுள்ள டீசரில் ஜூனியர் என்.டி.ஆர் இடம் பெற்றிருந்தார், மேலும் அந்த டீசரில் பாகுபலி அளவிலான பிரம்மாண்டத்தை கொண்டுவந்துள்ளார் ராஜமௌலி.
இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது, இதனை 24 மணி நேரத்தில் 14.15 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
மேலும் சர்கார் திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 14.91 பார்வையாளர்களை பெற்றிந்தது, இதை வைத்து பார்க்கும் போது தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தின் டீசர் சாதனையை ஆர்.ஆர்.ஆர் படம் முறியடிக்க தவறியுள்ளது.