Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Breaking : மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் இயக்குனர் பேரரசு..? தளபதி 65 படத்தின் ஹாட் அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

ஆனால் தற்போது தளபதி விஜய் இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளாராம். ஆம் இயக்குனர் பேரரசு மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி ஆகிய இரு இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டுள்ளாராம்.

அதில் ஏற்கனவே இரண்டு முறை விஜய்யை பேரரசு இயக்கியுள்ளதால், தளபதி 65 படத்தையும் பேரரசு இயக்க பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 65 படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்று..