மோகன் ஜி இயக்கத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் ‘திரெளபதி’. நடிகர் ரிச்சர்டு ரிஷி நடித்திருந்த இப்படம் பல சர்ச்சைகளை கடந்து வெளியாகியது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
தற்போது இயக்குனர் மோகன் ஜி அடுத்தாக தான் இயக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்துக்கு ‘ருத்ர தாண்டவம்’ என தலைப்பிட்டுள்ளது.
‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி மீண்டும் இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைக்க உள்ளார்.
மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, 2021-ம் ஆண்டு மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இனிமேல் திரைத்துறையில் எங்கள் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்...#ருத்ர_தாண்டவம்#மோகன்_ஜி_சத்ரியன் @mohandreamer#ரிஷி_ரிச்சர்ட் @richardrishi pic.twitter.com/6PLllltZHP
— க.முருகானந்தன் பாமக (@PMKAnandMS1) October 25, 2020