Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தங்கையாக தேசிய விருது வென்ற கதாநாயகி.. யார் தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் இரண்டாம் முறை நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான படம் வேதாளம்.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார், நடிகர் சிரஞ்சீவி நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியானது.

சமீபத்தில் கூட இப்படத்திற்காக தனது தலையை மொட்டை அடித்தது போல் மேக்கப் மூலம் வடிவமைத்திருந்தார் நடிகை சிரஞ்சீவி.

இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க, இவரின் தங்கையாக லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவின் தங்கையாக முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க போகிறாராம்.