இந்த படத்தையா குறை சொன்னீங்க! என்ன சாதனை செய்திருக்குது தெரியுமா மாஸ் காட்டும் சூர்யா
திரைப்படம் by Raana
சூர்யாவை இன்னும் விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனாலும் அவர் பொறுமையாக தன் செயல்களின் மூலம் சாதித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் சினிமாவுக்கு வந்து படிப்படியாக கற்றுக்கொண்டு இன்று டாப் ஹீரோவாக இருந்துவருகிறார்.
எல்லோருக்கும் போல இவருக்கும் பல சோதனைகள் வந்தன. அதே வேளையில் படங்கள் தோல்வியையும் தழுவியதுண்டு. அவ்வகையில் அஞ்சான் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.
லிங்கு சாமி இயக்கத்தில் வந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். யுவன் இசையில் பாடல்களும் கலக்கல்.
ஆனால் இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு Youtube ல் வெளியானது. இப்படம் 160 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் சாதனை செய்துள்ளது.