தமிழ் திரையில் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்க்கு பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல மார்க்கெட் உள்ளது. கடந்த வருடம் வெளியான பிகில் படம் 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்தது.
அதற்கு முன் வந்த சர்கார், மெர்சல், தெறி என படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் விஜய்யின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சில படங்கள் ரீமேக் செய்யப்பட்டாலும் சில படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன. அதில் ஹிந்தி டப் செய்யப்பட்டு Youtube ல் வெளியாகி அதிக பார்வைகளை பெற்ற படங்களை இப்போது காணலாம்.