விஜய் இந்த ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Topics : #Vijay #Atlee Kumar

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர் விஜய். இவரது மாஸ்டர் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

படத்தின் வேலைகள் அனைத்தும் வருட ஆரம்பத்திலேயே முடிந்திருக்க வேண்டியது, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முடிந்து படம் ரிலீஸுக்கு தயார், ஆனால் ரிலீஸ் செய்ய நேரம் தான் வரவில்லை.

இப்போதைக்கு அடுத்த வருட ஆரம்பத்திலேயே படம் வெளியாகும் என கூறியுள்ளனர்.

அடுத்து விஜய் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 65வது படத்தில் நடிப்பார் என்று பார்த்தால் இயக்குனர் படத்தில் இருந்து திடீர் விலகியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு பெயர் அடிபடுகிறது ஆனால் விஜய் யாருடன் இணைவார் என்பது தெரியவில்லை. அதேசமயம் விஜய் மீண்டும் அட்லீயுடன் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் அட்லீ மீண்டும் விஜய்யுடன் இணைகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.