Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு செம சப்ரைஸ்.. இனி கொண்டாடட்டம் தான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ மற்றும் மீனா நடித்து வரும் படம் அண்ணாத்த. கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

ஆனால் அரசு தளர்வுகளின் கீழ் கடந்த மாதம் படப்பிடிப்புகள் துவங்கியது. ஆனால் தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கொரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்பை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு அதிகமாக கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு அளிக்க உள்ளனர். ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர். இதனை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.