Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

6 நாளில் பிஸ்கோத் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா.. முழு விவரத்துடன் இதோ

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் சென்ற வாரம் தீபாவளி விருந்தாக திரையரங்கில் வெளியான படம் தான் பிஸ்கோத்.

இப்படத்தின் சந்தனத்துடன் இணைந்து சௌகார் ஜானகி, தாரா அலிஷா, மொட்டை ராஜேந்தர், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சென்ற வாரம் சனிக்கிழமை அன்று இப்படம் திரைக்கு வந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது.

இந்நிலையில் கடந்த 6 நாட்களில் பிஸ்கோத் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் எவ்வளவு என்று தற்போது தெரிந்து கொள்ளவோம்.

பிஸ்கோத் திரைப்படம் வெளியாகி கடந்த 6 நாட்களில் இந்தியளவில் மட்டும் ரூ. 2.87 கோடி மற்றும் உலகளவில் ரூ. 3.2 கோடி வரை வசூலித்துள்ளது.

மேலும் இப்படம் முதல் நாளில் ரூ. 90 லட்சம் வரை வசூலித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.