சூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்
நடிகர் சூர்யாவின் பெரிய நம்பிக்கையில் உருவாகிய படம் சூரரைப் போற்று. கண்டிப்பாக இப்படம் தனக்கு மாபெறும் வெற்றியை கொடுக்கும் என நம்பி இருந்தார்.
அதன்படி படமும் கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் அனைவருமே சூர்யாவை பாராட்டி வருகிறார்கள்.
இப்படி தமிழ் சினிமா மக்கள் படத்தை கொண்டாடி வர பாலிவுட் பிரபலம் ஒருவர் மோசமான கருத்துக்களை கூறி வருகிறார்.
அதாவது அவர் அண்மையில் தனது டுவிட்டரில், துபாயில் பெரிய மருத்துவமனையில் தலைமுடி சர்ஜரி செய்துள்ளார், இதுநாள் வரை ஒட்டு முடி வைத்து தான் நடித்தார் என பதிவு செய்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்தில் அவரை திட்டி வருகின்றனர். அதோடு பட வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவர் இப்படி எல்லாம் டுவிட் செய்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Finally south super star #Surya is in Dubai for hair plantation. Yesterday, he finished the surgery in a top hospital of Dubai. Surya was using a patch to shoot for his films for a long time now. pic.twitter.com/uPswkEXLjL
— KRKBOXOFFICE (@KRKBoxOffice) November 24, 2020