Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஃபிஹரு! முரட்டு சிங்கிள்! தாய் மாமனா நீ நாய் மாமன்! பெரும் சாதனையின் எம்.ஆர்.மகன்

சசிகுமாரின் படங்கள் என்றால் கிராமத்து கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு அலாதி பிரியம். சுப்பிரமணியபுரம், நடோடிகள் ஆகிய படங்களில் அதிக கவனத்தை அவர் பெற்றார்.

படம் இயக்குவதற்கு சற்று இடைவெளி கொடுத்து மற்ற இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அவ்வகையில் எம். ஜி. ஆர் மகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக டிக்டாக் புகழ்மிருணாளினி நடித்துள்ளார். கிராமம், பாசமான குடும்பம், இயற்கை வளங்களை அழிக்கும் சதி என பல விசயங்களை தாங்கள் கதை நகர்வதை அண்மையில் வெளியான டிரைலர் சொல்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா, சிங்கம் புலி என பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் டிரைலர் 3 மில்லியன் பார்வைகளை வெகு சில நாட்களிலேயே பெற்று சாதனை படைத்துள்ளது.