வெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..
இறுதி சுற்று படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் முதன் முறையாக, சூர்யா நடித்து வெளியான திரைப்படம் சூரரை போற்று.
ரசிகர்கள் மத்தியிலும், கோலிவுட் வட்டாரத்திலும் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படங்களில் மிக முக்கியமான ஒன்று இப்படம்.
திரையரங்கிற்கு பதிலாக ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியான இப்படம், தற்போது வரை சிறந்த வரவேற்பை பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
இந்நிலையில் வெளியான 3 வாரத்தில் சுமார் 110 மில்லியன் பேர் சூரரை போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்துள்ளார்களாம்.
இதனை கணக்கில் கொண்டு சூரரை போற்று திரைப்படம் ரூ. 370 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது சூர்யா நடித்து படங்களிலேயே இது மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்று தெரியவந்துள்ளது.