Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் ரீலீஸ் உறுதியானது! முக்கிய அரசியல் அமைச்சர் கூறிய ரிலீஸ் தேதி..

மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளதால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் கூட ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு பல பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி வெளியாக பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டது.

அதனை உறுதிசெய்யும் விதத்தில், திரைத்துறை அமைச்சர், திரு. கடம்பூர் ராஜு அவர்கள், மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 13ஆம் தேதி வெளியாகும் என உறுதியாக கூறியுள்ளார்.

இந்த செய்தி விஜயின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.