Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 65 இயக்குனரின் பெயரை கேட்டு கதறும் விஜய் ரசிகர்கள்.. யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் 65வது படத்தை யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தான் தளபதி விஜய் நடிக்க போவதாகவும், அப்படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று இரவு இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு விஜய் சென்றுள்ளார். இதனை வைத்து தளபதி 65 படத்தை அட்லீ இயக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் தளபதி 65 படத்திற்கு அட்லீ இயக்குனரா என ரசிகர்கள் பலரும் சில மீம்களை போட்டு கதறி வருகின்றனர்.

தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் யார் தளபதி 65 படத்தின் இயக்குனர் என்று..