Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இடத்தில் ரஜினி பட சாதனையை முறியடித்து முதல் இடத்தில் விஜய்யின் மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது. பல மாதங்களாக சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நாள் என்றே கூறலாம்.

நாயகி மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ் அட்லீ என பல பிரபலங்கள் பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.

அந்த புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில் மாஸ்டர் படம் ஆஸ்திரேலியாவில் செய்த சாதனை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது படம் முதல்நாள் ஓபனிங்கில் அதிக வசூல் செய்து ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துவிட்டதாம்.