மாஸ்டர் திரைப்படம் நீண்ட கால தள்ளிவைப்பிற்கு பிறகு இன்று தியேட்டர்களில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிவிட்டது. காலை முதலே தியேட்டர் வட்டாரங்களில் ரசிகர்களின் கூட்டம் இருந்தது.
படம் பார்ப்பதற்காக டிக்கெட் முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தில் முன்பதிவு செய்த பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் அரியலூரில் உள்ள தியேட்டரில் டிக்கெட்டுகளை இடைத்தரகர்கள் மூலம் சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக சம்மந்தப்பட்ட தியேட்டர் நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்துள்ளனராம். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்களாம்.