லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
கொரோனா அதிகரிக்கிறது என்ற செய்தி வந்ததால் படம் வெளியாகுமா, இல்லையா என்ற பயம் இருந்தது.
ஆனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படம் வெளியாகிவிட்டது.
தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளிலும் விஜய்யின் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து ரூ. 1 கோடிக்கு மேல் சென்னையில் வசூலித்து வந்தது.
ஆனால் நேற்றைய சென்னை வசூல் அப்படியே பாதியாக குறைந்துள்ளது. நேற்று மட்டும் படம் சென்னையில் ரூ. 54 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.
மொத்தமாக சென்னையில் படம் இதுவரை ரூ. 6.64 கோடி வசூலித்துள்ளதாம்.