சூரரை போற்று படத்தை முந்திய ஜகமே தந்திரம்..! OTT தளத்திற்கு இதனை கோடி விலையில் விற்கப்பட்டுள்ளதா..?
திரைப்படம் by Jeeva
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.
இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் டீசர் உடன் நேரடியாக Netfilx-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Netfilx இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், Netfilx ஜகமே தந்திரம் படத்தை ரூ.55 கோடி ($7.5 மில்லியன்) கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை நேரடியாக OTT யில் வெளியான திரைப்படங்களில் இப்படத்தை தான் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.