சூரரை போற்று படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு..! எப்போது தெரியுமா? விவரம் இதோ..
திரைப்படம் by Jeeva
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.
இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் சூரரை போற்று படத்தை நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிட்டனர், OTT-யில் வெளியான திரைப்படம் திரையரங்கில் வெளியான நிலையில் ரசிகர்கள் அலை மோதினர்.
மேலும் தற்போது சூரரை போற்று படத்தை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே OTT-ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்து வருகின்றனர்.