பிக்பாஸ் வீட்டில் வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக் ஹாசனின் போட்டியாளராக நுழைந்துள்ளார். இவர் பென்சில் என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான்.
தற்போது அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளதால், வெளியில் வந்த பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவரின் காதலி இவர்தான் என கூறி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அவரின் பெயர் அஸ்வினி சக்திவேல் என்றும், சாப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறார் என்றும் கூறப்படுகிறது.