தமிழ் சினிமாவில் உள்ள ஜோடிகளில் மிகவும் பிரபலம் ஜெய் அஞ்சலி ஜோடி. எங்கேயும் எப்போதும் படத்தில் முதன் முறையாக இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி கொண்டது.
அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் இணைந்த போட்டோக்களும் செய்திகளும் வந்த வண்ணமே இருந்தன. அதன் பிறகு இவர்கள் நடித்த சில படங்களும் பெரிய அளவில் ஹிட் தரவில்லை. இதனால் அவர்களிடையே கருத்து வேறுபாட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.
அஞ்சலியும் ஜெய்யுடன் எனக்கு காதலில்லை எனவும் கூறிவிட்டார். இருவரும் பிரிந்து விட்டதாகவே திரையுலகில் பேச்சுகள் எழுந்தன. அதை உறுதி செய்யும் விதமாக தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
கடந்த 17 ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய அஞ்சலிக்கு ஜெய் தரப்பில் இருந்து ஒரு பிறந்த நாள் வாழ்த்து செய்தி கூட அனுப்ப வில்லையாம். இதன் மூலம் தங்களுக்குள் காதல் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விட்டனர்.
சென்ற ஆண்டு பிறந்த நாளின் போது ஒரு கவிதையையே சமூக வலைதளத்தில் ஜெய் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.