நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்பது அனைவருக்கம் தெரியும். பல வருடங்களாக இந்த பாலிசியை அவர் கடைபிடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவையும் நயன்தாரா புறக்கணித்தார். விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படவிழாவை நயன்தாரா புறக்கணித்தது பலரது மத்தியில் பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தெலுங்கில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் விழாவிற்கு வரும்படி நயன்தாராவை நடிகர் ராம் சரண் அழைத்தபோது அதை நிராகரித்துள்ளார் நயன்தாரா. தற்போது பிகில் பட விழாவில் பங்கேற்றால் தெலுங்கு சினிமா துறையினர் அதிருப்தி அடைவார்கள் என்பதால் தான் நயன்தாரா விஜய் பட விழாவையும் புறக்கணித்துள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.