Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகரின் மகனை காதலிக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன்?

கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்துள்ளார். சிவகார்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்துள்ள அவர், சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்திலும் நடிக்கவிருந்தார். ஆனால் சிம்புவால் தொடர்ந்து ஷூட்டிங் தள்ளிப்போன நிலையில் படம் ட்ராப் ஆகிவிட்டது.

இந்நிலையில் கல்யாணி தற்போது மேலும் சில மலையாள படங்களை ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒருபுறமிருக்க கல்யாணி காதல் விஷயம் பற்றி புதிய கிசுகிசு பரவி வருகிறது.

"நான் யாரை காதலிக்கிறேன் என்று குடும்பத்தினருக்கு தெரியும்" என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கல்யாணி. அவர் நடிகர் மோஹன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலை தான் காதலிக்கிறார் என தற்போது பலரும் கிசுகிசுகின்றனர்.

இது உண்மையா என்பதை கல்யாணி ப்ரியதர்ஷன் தான் கூற வேண்டும்.