Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் அப்பா கிருஷ்ணமூர்த்தி தான்!- ஆதாரத்துடன் விசு பரபரப்பு பேட்டி

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர் என நிரூபித்தவர் தனுஷ். பாலிவுட்டில் நடித்து விட்டு ஹாலிவுட்டுக்கு விரைவில் செல்லவிருக்கும் இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவர் தன்னுடைய மகன் என்று நீண்ட நாட்காலமாக ஒரு சிவகங்கையை சேர்ந்த தம்பதி ஒன்று கூறிவழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் விசு இதுபற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், என்னிடம் 15 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரி ராஜா வேலை செய்தார். இவரின் குடும்பம் ஏழ்மையில் இருந்தபோதிலிருந்து பார்த்து வருகிறேன்.

தனுஷை நான் சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன் என்று அடித்து கூறுகிறார். மேலும் அவர் தன்னுடன் தனுஷ் குடும்பம் இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.